தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!
தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை தொடர்பாக ஆலோசனை என தகவல்கள் வெளியாகியுள்ளன.