அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வம் மனு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக நாளை விசாரிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது.

Update: 2022-07-05 05:33 GMT

சென்னை,

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், 11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து தனி நீதிபதி முன் முறையிட்டார் ஓ.பன்னீர் செல்வம்.

அவசர வழக்காக எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று நாளை விசாரிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் மனுவரை அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வருகிறது.

ஜூலை 11-ல் பொதுக்குழு நடைபெற இருப்பதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்தது என ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்