சத்துணவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2023-05-03 19:37 GMT

கம்மாபுரம்:

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு குறித்து கேட்டதற்கு மவுனம் சாதித்த அதிகாரிகளை கண்டித்து ஒன்றிய தலைவர் தெய்வசிகாமணி, சிறப்பு தலைவர் சீனிவாசன், செயலாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பகல் 1 மணி அளவில் சத்துணவு பணியாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் தலைமையான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சத்துணவு மேலாளராக பணிபரிந்து வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாமணியிடம் பலமுறை கோரிக்கைளை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக சத்துணவு பணியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாகவும், தற்போது நிகழும் நிகழ்வை சரி செய்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தார். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்