சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
திருவாடானையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.;
தொண்டி,
திருவாடானையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் செல்வம், செயலாளர் ராசு. பொருளாளர் மாரியம்மாள், மாநில செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு திட்டத்தில் காலை உணவு வழங்குவதை சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டே நடத்த வேண்டும். கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்கிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி சத்துணவு ஊழியர்கள் கையொப்பம் பெற்றனர். இதில் திருவாடானை ஒன்றியத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.