தேமங்கலம் ஊராட்சியில் உள்ள உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாதவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார மேற்பார்வையாளர்கள் மேரிபால், லட்சுமி, செல்வி ஆகியோர் ஊட்டச்சத்து பற்றி பேசினர்.தொடர்ந்து அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது.
இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்தழகன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் துணை தலைவர் ராஜேந்திரன் உள்பட 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் தேமங்கலம் அங்கன்வாடி பணியாளர் பரிமளா நன்றி கூறினார்.