ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி

ராதாபுரம் அருகே ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-03-31 20:15 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே இருக்கன்துறையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இருக்கன்துறை ஊராட்சி செயலர் ஆனந்தகுமார், கணக்காளர் இசைமலர் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்து மகளிர் குழுக்கள் பிரத்தியேகமாக செய்து கொண்டு வந்திருந்த ஊட்டச்சத்து உணவு பொருட்களையும், பழங்கள், காய்கறிகளையும் பார்வையிட்டனர். பின்னர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மகளிர் சுய உதவிகுழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்