ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-01 22:21 GMT

ஈரோடு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு வழியாக சென்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 20 குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார். இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, ஏகம் அறக்கட்டளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ராஜ் மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்