பள்ளிப்பட்டு அருகே நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு அருகே நர்சிங் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-08-04 10:36 GMT

பள்ளிப்பட்டு அருகே முனிரெட்டி கண்டிகை கிராமம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 50). இவரது மனைவி விஜயா (42). இவர்களுக்கு நவீன் (24), நரேன் (16) என்ற இரண்டு மகன்களும், நந்தினி (21) என்ற மகளும் உள்ளனர்.

இவர்களில் நவீன் சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி நர்சிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார். கடைசி மகன் நரேன் பள்ளிப்பட்டு நகரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று விஜயா மகள் நந்தினியிடம் வீட்டில் சும்மா இருக்கிறாயே ஏதாவது வேலை செய்யலாமே என்று கூறியதாக தெரிகிறது.

பின்னர் முனுசாமியும், மனைவி விஜயாவும் வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் 2 மணி அளவில் நந்தினி பாட்டி கெங்கம்மாள் வீட்டிற்கு வந்தார். அப்போது நந்தினி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கெங்கம்மாள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நந்தினியை மீட்டு பள்ளிப்பட்டு தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நந்தினியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நந்தினியின் தந்தை முனுசாமி பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் நந்தினி உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்