பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2022-10-06 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நர்சுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சலீம் செயலாளர் முத்துக்குமாராகியர் கலந்து கொண்டு பேசினார்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட குந்தலாடி துணை சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த ஜெகதீஸ்வரி என்ற நர்சு தாக்கப்பட்டார். எனவே அவரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் இருக்கும் நர்சுகளுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் மகப்பேறு நிதி உதவி திட்டத்தை நிதி துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும். துணை சுகாதார நிலையங்களுக்கு பணி அமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு தனி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்றனர். மாநில நிர்வாகிகள் பிரகலதா, செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்