சேலத்தில் நர்சுகள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் நர்சுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார நர்சுகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் கோகிலா தலைமை தாங்கினார். செயலாளர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கிராம நர்சுகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான நர்சுகள் கலந்து கொண்டனர்.