செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொரோனா காலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களை கடந்த மாதம் தமிழக அரசு பணியில் இருந்து நிறுத்தியது. இதனை கண்டித்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.