வடசேரியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
வடசேரியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நாகர்கோவில்:
வடசேரியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சுகாதார செவிலியரான சுதா என்பவரை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நேற்று நாகா்கோவில் வடசேரியில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார்.
இதில் சங்க நிர்வாகிகள் பிரின்சி மேரி, சசிகலா, நீலா, பாரதி உள்பட செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.