செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்பு

செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2023-05-12 19:27 GMT

கைவிளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே 12-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் ஒருங்கிணைந்து கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தி எனது வாழ்வில் மிகவும் தூய்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றுவேன் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் கேக்வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மூத்த செவிலியர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் அம்மையாரின் நினைவாக கேடயங்களும், பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டது. இதில் தலைமை செவிலியர் ஜெயபாரதி மற்றும் செவிலியர்கள், டாக்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்