ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-04-24 18:49 GMT

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி தலைமையேற்று தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயபாரதி, வட்டார கல்வி அலுவலர்கள் எழிலரசி, பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் விதம், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இரண்டாம் கல்வியாண்டின் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் கையேட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள பாடப்பொருள் குறித்து ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் எண்ணும் எழுத்தும் வகுப்பறை கலங்கள் அமைப்பு முறை, சின்னங்கள் பற்றிய விளக்கம், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள செயல்முறை படிநிலைகள் குறித்தும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பாலசுப்ரமணியம், காமராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகன் ஆகியோர் செய்திருந்தனர். 3 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 121 தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்