எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

களக்காட்டில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-06-03 19:04 GMT

களக்காடு:

களக்காடு வட்டார வள மையத்தில் எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி முகாம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடந்தது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் (நிர்வாகம்) ராஜேந்திரன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆன்றோ பூபாலராயன் பயிற்சியின் நோக்கங்கள் குறித்து விளக்கினர். முதுநிலை விரிவுரையாளர் ஜெபமலர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் களக்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்