ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மயிலாடுதுறையில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது
மயிலாடுதுறையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கையாளும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வழிகாட்டுதலின்படி நடைபெற்ற முகாமில், மாவட்ட திட்ட அலுவலர் ஞானசேகர், மாவட்ட உடற்கல்வி அலுவலர் பார்த்தசாரதி, வட்டார கல்வி அலுவலர்கள் ஜானகி, தமிழ்ச்செல்வி, பௌலின், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகையன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். இதில், முகாமில் ஆசிரியர்கள், கருத்தாளர்கள் 30 பேர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் 200 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.