ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

Update: 2023-04-26 18:45 GMT

கோட்டூர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும்- எழுத்தும் பயிற்சி கோட்டூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 3 நாட்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் என பாட வாரியாக நடைபெற்ற பயிற்சியில் ஒன்றியத்தில் உள்ள 104 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 124 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கணித பாடத்திற்கான பயிற்சியை மாநில இணை இயக்குனர் பொன்னையா பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவன பேராசிரியை மீனாட்சி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் 109 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயிற்சியை திருவாரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சவுந்தரராஜன் பார்வையிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்