எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு

நன்னிலத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2023-10-07 19:00 GMT

நன்னிலம்;

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் நன்னிலம் வட்டார வளமையத்தில் 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.மாவட்ட கல்வி அலுவலர் கலந்து கொண்டு எண்ணும், எழுத்தும் கற்றல் கற்பித்தலை சிறப்பாக மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு நூல்கள் வழங்கி பாராட்டினார். பயிற்சி வகுப்பில் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பயிற்சி ஆசிரியர் செல்வி பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனிவேல், வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருகபாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்