தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

வேலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-10-03 17:54 GMT

வேலூர் புறநகர் ஒன்றியத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த பயிற்சி வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. பள்ளி தலைமையாசிரியை சாந்தி பயிற்சியை தொடங்கி வைத்தார். 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுன்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சியை வேலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணி பார்வையிட்டு பயிற்சி குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த பயிற்சியில் 97 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

இன்று 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும், நாளை, நாளை நாள் 4,5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்