விதிகளை மீறி நம்பர் பிளேட் - 3,232 வாகனங்களுக்கு அபராதம்

விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய 3,232 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது;

Update: 2023-02-25 16:27 GMT

சென்னை,

விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் அதிரடியாக தொடங்கினர்.

சென்னையில் பதிவெண்களை முறையாக எழுதாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதித்தனர். இது தொடர்பான நோட்டீஸ்களையும் வண்டியில் ஒட்டினர். சென்னை மாநகரம் முழுவதும் இந்த அதிரடி வேட்டை நடைபெற்றது.

இந்த நிலையில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய 3,232 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்