சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களின் எண் மாற்றம்

சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களின் எண் மாற்றப்பட்டுள்ளது.

Update: 2024-06-30 22:46 GMT

சேலம்,

சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களின் எண் மாற்றம் செய்யப்பட்டு புதிய வண்டி எண்களில் இயக்கப்படும் ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய வண்டி எண் அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி திருவனந்தபுரம்- சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில -12507 (புதிய வண்டி எண் 15677), சில்சார்- திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரெயில்- 12508 (புதிய வண்டி எண் 15678), கோவை- சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் - 12515 (புதிய வண்டி எண் 15675), சில்சார்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்- 12516 (புதிய வண்டி எண் 15676), கன்னியாகுமரி- திப்ருகார் எக்ஸ்பிரஸ் ரெயில் - 22503 (புதிய வண்டி எண் 15905), திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் - 22504 (புதிய வண்டி எண் 15906) ஆகிய ரெயில்கள் புதிய எண்களில் இன்று (திங்கள்) முதல் இயக்கப்படும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்