புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-09 18:39 GMT

கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கரூர் மாவட்ட சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசகுமார் தலைமை தாங்கினார்.அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாவட்ட செயலாளர் தாமோதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிபடி தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாமல், சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததை எதிர்த்து சட்டமன்றம் கூட்டம் தொடங்கும் நாளன்று காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்