எரியோடு அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

எரியோடு அருகே தங்கச்சியம்மாபட்டியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-05 14:33 GMT

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், எரியோடு அருகே உள்ள கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்து. தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த முகாம் தொடக்க விழாவுக்கு, கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி நடராஜன் தலைமை தாங்கினார்.

கோ.ராமநாதபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோபிநாத், உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பாண்டிக்குமரன் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட திட்ட அலுவலர் சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதைத்தொடர்ந்து கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி, முக்கிய சாலைகளின் வழியாக சென்றது. தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், காளியம்மன் கோவில் வளாகம் ஆகியவற்றை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்தனர். மேலும் சாலை பாதுகாப்பு, டெங்கு காய்ச்சல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்