மேகமலையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
மேகமலையில் சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி சார்பில் மேகமலை பகுதியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அப்பள்ளியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு களப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலித்தீன் பைகள் ஒழிப்பு, மீண்டும் மஞ்சப்பை இயக்கம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மேகமலை வனப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தினர். இந்த முகாமை தேனி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன், பள்ளி செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். இதில், பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் வளர்மதி, தேனி மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நேருராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.