சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!

சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.;

Update: 2023-11-30 03:01 GMT

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். அத்துடன், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.

சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தற்போது மழைநீர் தேங்கவில்லை என்றும், சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமில்லா எண் 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்