ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு:பிரதமர் நரேந்திரமோடியின் தவறான பொருளாதார கொள்கைஈரோட்டில் ராமகிருட்டிணன் பேட்டி

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு: பிரதமர் நரேந்திரமோடியின் தவறான பொருளாதார கொள்கை என்று ஈரோட்டில் ராமகிருட்டிணன் பேசினாா்.

Update: 2023-05-20 21:09 GMT

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "பெரியாரியல் பயிலரங்கம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இந்தியாவில் தீவிரவாதம் அழியும், கருப்பு பணம் ஒழியும் என்று கடந்த காலத்தில் ரூ.1,000 நோட்டு தடை செய்யப்பட்டது. பா.ஜ.க.வின் இந்த செயல்பாட்டால் மக்கள்தான் சிரமப்பட்டார்கள். இந்தநிலையில் அவர்களே கொண்டு வந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மீண்டும் செல்லாது என்று அறிவித்து இருப்பது பிரதமர் நரேந்திரமோடியின் தவறான பொருளாதார கொள்கையை வெளிகாட்டுகிறது. மக்கள் நலனை பாராமல் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அதன் அடையாளமாகத்தான் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதே நிலைதான் பா.ஜ.க.வுக்கு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயராமன், வாலாசா வல்லவன், சாரோன், சீனி விடுதலை அரசு ஆகியோர் கலந்துகொண்டு பேசினா். இந்த கருத்தரங்கில் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் வரவேற்று பேசினார். முடிவில் ஈரோடு நகர இளைஞர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்