பொள்ளாச்சி நகராட்சியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

பொள்ளாச்சி நகராட்சியில்அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய நகராட்சி நிர்வாகம், 2 நாட்களில் அப்புறப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-12-18 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சியில்அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய நகராட்சி நிர்வாகம், 2 நாட்களில் அப்புறப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.

நோட்டீஸ்

பொள்ளாச்சி நகராட்சியில் கோவைரோடு, உடுமலைரோடு, பாலக்காடுரோடு, நியூஸ்கீம்ரோடு ஆகிய பகுதிகளில் வணிக வளாகங்கள் மற்றும் கட்டிட குடியிருப்புகளில் நகராட்சி அனுமதி இல்லாமல் கடடிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனை அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை பொள்ளாச்சி நகராட்சிக்கு புகார் வந்தன. அதன்படி நேற்று முன்தினம் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து விபரங்களை கேட்டறிந்து அதில் முதல் கட்டமாக பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடும் நடவடிக்கை

இதனையடுத்து நேற்று முதல் கட்டமாக பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 47 கட்டிட உரிமையாளர்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி நிர்வாக அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும் போது:- அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 47 கட்டிடங்களிர் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் வழங்கப்பட்ட 48 மணி நேரத்தில் (2 நாட்கள்) கட்டிட உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்