சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

வேலூரில்சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.;

Update: 2023-08-16 18:10 GMT

வேலூர் நகரில் உள்ள ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகள், குடிநீர் வழங்கப்படுகிறதா?, சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி ஆகியோர் நேற்று வேலூர் சத்துவாச்சாரி, பாகாயம் பகுதியில் உள்ள 11 ஓட்டல்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 2 ஓட்டல்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக கலர்பொடி பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 3 கிலோ சிக்கன் மற்றும் 4 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சமையலுக்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த கூடாது. வாடிக்கையாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ஓட்டலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்