சென்னையில் வெள்ளப் பாதிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்கும் எண்கள் அறிவிப்பு

சென்னையில் வெள்ளப் பாதிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்கும் எண்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.;

Update: 2022-06-21 07:36 GMT

சென்னை,

சென்னையில் கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.அதனால் ஏரிக்ளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மழையினால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றது.

மேலும்,மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் முதற்கட்டமாக 250 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக புகார் அளிக்கும் எண்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1070 மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், TNSMART செயலி மூலமாகவும் புகாரளிக்கலாம் எனவும் பேரிடர் மேலாண்மை துறை கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்