மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்

Update: 2023-07-15 19:30 GMT

நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமருகல் அருகே சியாத்தமங்கையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் சுகுமாரன் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு-புத்தகம், பேனாக்களை வழங்கினர். இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, மீனவர் அணி பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்