ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம்
கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் வழங்கப்பட்டது.
சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் துளசிராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஸ்ரீ பிரபு கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 100 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
வார்டு உறுப்பினர் சுகந்தி சின்னத்தம்பி, பள்ளி ஆசிரியர்கள் சுமதி, அனிதா மற்றும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.