கழுகுமலையில் முககவசம் அணியாத 7 பேருக்கு அபராதம்
கழுகுமலையில் முககவசம் அணியாத 7 பேருக்கு தலா தலா ரூ.500அபராதம் விதிக்கப்பட்டது.
கழுகுமலை:
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா அறிவுறுத்தலின்படி, கயத்தாறு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் தலைமையில் நேற்று கழுகுமலை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொது இடங்களில் முககவசம் அணியாத 7 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து, உடனடியாக வசூல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பொது இடங்களில் முககவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பாபு, கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.