பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

கண்டமனூர் அருகே பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-28 14:18 GMT

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். அவருடைய மகன் தீபக் (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 10 நாட்களாக இவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கேட்டதற்கு, பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என தீபக் கூறியதாக தெரிகிறது. இதனால் தீபக்கை பள்ளிக்கு செல்லுமாறு அவரது தாயார் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத தீபக் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் போலீசார் சம்பவ இடத்தி்ற்கு வந்து தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்