குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 9 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நெல்லையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 9 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2023-09-04 20:01 GMT

நெல்லையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 9 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறைந்தபட்ச ஊதியம்

2023 ஆகஸ்டு மாதத்துக்கான குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொழிலில் குறிப்பாக அழகுநிலையம், திருமண மண்டபம், சமுதாய மண்டபம், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்லைக்கு உட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.

குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் 38 நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டபோது குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 9 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நிலுவைத்தொகை

இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மற்றும் நிலுவைத்தொகை ரூ.60 ஆயிரத்து 71 வழங்கக்கோரி 6 கேட்பு மனுக்கள் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ரூ.6 லட்சத்து 68 ஆயிரத்து 426 வழங்கக்கோரி 3 கேட்பு மனுக்கள் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் 48 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்