4 மாதங்களாக குறையாத வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம்

4 மாதங்களாக வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் குறையாததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2022-08-14 18:42 GMT

தாயில்பட்டி, 

4 மாதங்களாக வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் குறையாததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெம்பக்கோட்டை அணை

சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை 24 அடி உயரம் கொண்டதாகும். அணையில் ஐந்து மதகுகள் உள்ளன. மேலும் வலது, இடது கால்வாய் மூலமாக கோட்டைப்பட்டி, சூரார்பட்டி, வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம், வல்லம்பட்டி, சல்வார்பட்டி, படந்தாள், பனையடிப்பட்டி, சேதுராமலிங்காபுரம், சங்கரநத்தம், பந்துவார்பட்டி உள்பட 20-க்கும் ‌ மேற்பட்ட கிராம மக்கள் பாசன வசதி பெறுகின்றனர். அணையில் இருந்து சிவகாசிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அணை 2015-க்கு பிறகு 2020 ஏப்ரல் மாதத்தில் முழுமையாக நிரம்பியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணையிலும், கிணறுகளிலும் நீர் மட்டம் குறையவில்லை. இதனால் விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது மழையும் பெய்வதால் கடந்த 4 மாதமாக நீர்மட்டம் குறையாமல் அப்படிேய உள்ளது. அணையில் தற்போது 15 அடி உயரம் தண்ணீர் உள்ளது. மேலும் மழைக்காலம் தொடங்க இருப்பதால் அணையில் தண்ணீர் சிறிதளவு கூட குறைய வாய்ப்பு இல்லை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாய பணிகளை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்