மகாத்மா தேசிய ஊரக திட்டத்தில் ஆண்டுக்கு 12 நாட்கள் கூட வேலை தரவில்லை- மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் மக்கள் புகார்

மகாத்மா தேசிய ஊரக திட்டத்தில் ஆண்டுக்கு 12 நாட்கள் கூட வேலை தரவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் மக்கள் புகார் அளிக்கப்பட்டது

Update: 2023-04-24 21:26 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட விளாச்சேரி ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் நடைபெற்ற பணியினை மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். அவர் பணியாளர்களான கிராம பெண்களிடம் கடந்த 2022 மார்ச் மாதம் முதல் நடப்பு ஆண்டு 2023 ஏப்ரல் மாதம் வரை ஒரு ஆண்டில் குறைந்தபட்சமாக 50 நாட்கள் வேலை பார்த்தவர்கள் கைதூக்குங்கள் என்றார். அப்போது பெண்கள் யாரும் 50 நாட்கள் வேலை பார்க்கவில்லை என்றனர். எத்தனைநாள் வேலை பார்த்து உள்ளீர்கள்? என கேட்டார். அதற்கு அரசு விடுமுறை தவிர ஒரு ஆண்டில் 12 நாட்கள் மட்டுமே வேலை தந்துள்ளனர். வேலை பதிவு செய்வதும் இல்லை, அட்டையும் தருவதில்லை என்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கீதாவிடம் மக்களுக்கு 100 நாள் வேலை தராதது ஏன்? என மாணிக்கம் தாகூர் எம்.பி. கேட்டார். பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களிடம் பேசுகையில், இதுகுறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். வளர்ச்சி மன்ற கூட்டத்திலும் பேசுகிறேன். ஒரு வெள்ளை பேப்பரில் கார்டு (அட்டை) வேண்டும் என எழுதிஆதார் அட்டை ஜெராக்ஸ், வங்கி கணக்கு ஜெராக்ஸ் சேர்த்து பஞ்சாயத்து கிளர்க்கிடம் கொடுங்கள். 3 நாளில் கொடுக்கவில்லை என்றால் வழக்கு போடலாம் என்றார்.

ஆய்வின்போது திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ஒன்றிய குழு தலைவர் வேட்டையன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத்தலைவர் முத்துலட்சுமி குரும்பன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிக்குமார், முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுப்பிரமணியன், விளாச்சேரி ஊராட்சி செயலர் ராஜமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்