வடமாநில வாலிபர் தவறி விழுந்து சாவு

தூத்துக்குடி அரிசி ஆலையில் வடமாநில வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-04 17:10 GMT

தூத்துக்குடி:

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரமோத் ரிஷாத் (வயது 28). இவர் உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று 20 அடி உயரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரமோத் ரிஷாத் திடீரென தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்