தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை

நாகையில் தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-08-24 18:45 GMT


நாகையில் தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

வடமாநில தொழிலாளி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் சுதார் (வயது 30). இவர் நாகை வெளிப்பாளையம் சிவன் குளம் மேல்கரையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து தச்சு வேலை செய்து வருகிறார்.

இவருடன் ராஜஸ்தான் மாநிலம் கீன்வசார் பகுதியை சேர்ந்த மாங்கிலால் என்பவரது மகன் சவரப்ராம் (20) உள்பட 11 பேர், வீட்டில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று சவரப்ராம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.

தூக்கில் பிணம்

தினேஷ் சுதார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சவரப்ராம் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சவரப்ராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சவரப்ராம் உறவினர்கள் நாகைக்கு வந்து, உடலை விமான மூலம் ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றனர். நாகையில் வட மாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்