வட மாநில தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்

தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-06 18:45 GMT

தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளர்கள் சம்பள பாக்கியை வழங்க கோரி வியாழக்கிழமை காலையில் திடீர் தார்ணா போராட்டம் நடத்தினர்.

வடமாநில தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்ததாரர்கள் வடமாநில தொழிலாளர்களை வைத்து வேலை செய்து வருகின்றனர். இதே போன்று ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்ணா போராட்டம்

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் விரிவாக்கம் பணிகளில் சுமார் 90 வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் நேற்று காலை பழைய பஸ்நிலைய கட்டுமானம் பணிகள் நடைபெறும் இடத்தில் அமர்ந்து சம்பள பாக்கியை வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பேரில் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்