தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 11% குறைவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

Update: 2023-11-25 07:24 GMT

சென்னை, 

தமிழக பகுதிகளின் மீது நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று பரவலாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலையிலேயே கனமழை பெய்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 294.8 மி.மீ மழை பெய்துள்ளது. ஆனால் வழக்கமாக இன்று வரை 331.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். இதனால் 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்