தென்னை நார் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளி தற்கொலை

தென்னை நார் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளி தற்கொலை

Update: 2023-05-01 18:45 GMT

பொள்ளாச்சி

கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 18). இவர் பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரம் பிரிவில் உள்ள ஒரு தனியார் தென்னைநார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் செல்போனில் ஒரு பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. பின்னர் அங்கு உள்ள கழிவறைக்கு சென்றவர் நீண்டநேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்த போது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராகுல் கொல்கத்தாவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்