வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வடமாநில பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-08-16 21:57 GMT

சென்னிமலை

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாகிதா ஹாதுன் (வயது 24). இவர் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்தார். வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக ஜாகிதா ஹாதுன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் ஜாகிதா ஹாதுன் வேலை பார்த்த நிறுவனத்தில் சுதந்திர தினம் கொண்டாட அனைத்து தொழிலாளர்களும் சென்றுள்ளனர். ஜாகிதா ஹாதுன் மட்டும் செல்லவில்லை.

இந்தநிலையில் நிறுவனத்திற்கு சொந்தமான விடுதிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் ஜாகிதா ஹாதுன் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார். அதை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜாகிதா ஹாதுன் இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகிதா ஹாதுன் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்