ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி

காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலியானார்.

Update: 2023-08-28 17:58 GMT

காட்பாடி- லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் மார்க்கத்தில் ஏதோ ஒரு ரெயிலில் பயணம் செய்தவர் தவறி விழுந்து அடிப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்