கன்னியாகுமரி அருகே டெம்போ மோதி வடமாநில தொழிலாளி பலி
கன்னியாகுமரி அருகே டெம்போ மோதி வடமாநில தொழிலாளி பலியானார்.;
கன்னியாகுமரி:
ஜார்க்கண்ட் மாநிலம் கட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் போலோ (வயது40). இவர் கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை பகுதியில் தங்கியிருந்து கொத்தனாராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் போலோ நேற்றுமுன்தினம் இரவு ஒற்றையால்விளை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த போலோ கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்பு தான் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் இரவு வீட்டில் அவர் திடீரென இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளி மீது ேமாதிவிட்டு நிற்காமல் சென்ற மினி டெம்போவை தேடி வருகிறார்கள்.