மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

நாகூரில் மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.;

Update: 2022-11-22 18:45 GMT

நாகூர்:

நாகூரில் மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.

மேம்பாலம் சீரமைக்கும் பணி

மேற்குவங்காள மாநிலம் ெகால்கத்தா ஆரம்பூர் கொரியம்பூரை சேர்ந்தவர் திலிப் சர்க்கார் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி சுமித்ரா (45). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நாகையை அடுத்த நாகூர் வெட்டாற்று பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் திலிப் சர்க்கார் ஈடுபட்டு வந்தார். இவர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

மின்சாரம் தாக்கியது

இந்த நிலையில் நேற்று முன்தினம் சமையல் செய்வதற்காக தண்ணீர் பிடிக்க மின்மோட்டார் சுவீட்சை இயக்கிய போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் திலிப் சர்க்கார் மயங்கி விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே திலிப் சர்க்கார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து புகாரின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Tags:    

மேலும் செய்திகள்