வடமாநில தொழிலாளி சாவு

சிப்காட் வளாகத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

Update: 2023-08-04 20:02 GMT

நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரேம் சர்மா (வயது 55) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பிரேம்சர்மா பணியில் இருந்தார். அப்போது போர்க் லிப்ட் எந்திரத்தை பீகார் மாநிலத்தை சேர்ந்த கமரா ஆலம் (30) என்பவர் எதிர்பாராதவிதமாக இயக்கினாராம். இதில் போர்க் லிப்ட் எந்திரம் பிரேம் சர்மா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த பிரேம் சர்மா, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்