சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சமயபுரம்:
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் திலீப்குமார்(வயது 43). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டியில் கூலி வேலை செய்வதற்காக வந்தார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்தப் பகுதியிலேயே தங்கியிருந்து சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த சிலர் திருச்சி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோல்டன்சிங் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மகளிர் போலீசார் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.