வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

Update: 2022-10-29 18:45 GMT

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணை யாளருமமான தாரேஸ் அகமது தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மழைபெய்யும் போது அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேம்பாலங்கள், சாலைகள் ஆகியவை பழுதடைந்து இருந்தால் நெடுஞ்சாலைத்துறை மூலம்உடனே சரி செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக சுத்திகரிக் கப்பட்டு தங்கு தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும்.

ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் உரிய முறையில் அறிவிப்பு செய்ய வேண்டும். மணல் மூட்டைகள் போதுமான அளவில் வைத்து இருக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பிக ளை உடனே மாற்ற வேண்டும்.

மழை மானிகள், வயர்லெஸ் கருவிகள் நல்ல முறையில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மின் இணைப்பை சரிபார்க்க வேண்டும்.

திறந்தவெளி வடிகால்களை சுத்தம் செய்து மூடிடவும் பள்ளி கட்டிடங்களின் உறுதிதன்மையை ஆய்வு செய்யவும் வேண்டும். மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவகையில் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்