கரூர் ரெயில் நிலையத்தில் செயல்படாத மின்னணு பெயர் பலகை

கரூர் ரெயில் நிலையத்தில் செயல்படாத மின்னணு பெயர் பலகை குறித்து நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-20 18:30 GMT

கரூர் ரெயில் நிலையம்

திருச்சி, ஈரோடு இடையே கரூர் வழியாக இயக்கப்படும் ெரயில் சேவைக்காக கடந்த 1866-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி மீட்டர் கேஜ் ெரயில் பாதையாக தொடங்கப்பட்டது. பின்னர் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 1890-ம் ஆண்டு கரூர் ெரயில் நிலையத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக லண்டனில் இருந்து எடை எந்திரம் கொண்டு வரப்பட்டது. இது ஒரு டன் எடை வரை கொண்டதாக உள்ளது. தொடர்ந்து கரூர்-திண்டுக்கல் இடையே 120 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்ட புதிய அகல ரெயில் பாதையை அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி கரூர் ெரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து சேலத்தையும், கரூரையும் இணைக்கும் புதிய அகல ெரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, தற்போது கடந்த சில ஆண்டுகளாக கரூர்-சேலத்திற்கு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

5 ஆயிரம் பயணிகள்

இதனால் கரூர் ெரயில் நிலையம் வழியாக தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 45-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு நாளைக்கு சுமார் 5000-க்கும் மேற்பட்ட பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு சிறப்புமிக்க இந்த ெரயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ெரயில் நிலையத்திற்கு வரும் ெரயில் பயணிகள் ெரயில் வரும் நேரம், ெரயிலின் பெயர், வண்டி எண், செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு எந்திரம் பெயர் பலகை வசதி செய்யப்பட்டு இருந்தது.

கோரிக்கை

இதனால் ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அதன் மூலம் தாங்கள் செல்ல இருக்கும் ெரயில் குறித்து எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக மின்னணு எந்திரம் பெயர் பலகை இயங்கவில்லை. இதனால் ெரயில் பயணிகள் ரெயிலில் செல்லும் நேரம் குறித்து அறிந்து கொள்வதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ெரயில்வே போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் ெரயில் பயணிகள் வண்டி எண் உள்ளிட்ட விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மீண்டும் மின்னணு எந்திரபலகையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெரயில் பயணிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்