விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
குடவாசல் தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மஞ்சக்குடி, எரவாஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் நடந்தது. நிகழ்ச்சியில் குடவாசல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிபாசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி அன்று பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.